மட்டக்களப்பு மாநகர சபையில் வருடாந்தம் இடம்பெற்று வருகின்ற சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வு வழமை போன்று இம்முறையும் மாநகர உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மேற்படி இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர்ளின் ஒழுங்கமைப்பில் கடந்த வியாழக்கிழமை (20) மாநகர ஆணையாளரும், மாநகர உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான திரு.என்.தனஞ்ஜெயன் தலைமையில் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
வந்தாறுமூலை, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.நஷ்மல் (பலாஹி) இந் நிகழ்வின் விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

