வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததைக் கண்ணுற்று, திடீரென துவிச்சக்கர வண்டியை நிறுத்த முற்பட்ட வேளை, துவிச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த 73 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் இருந்து கடந்த 19ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர், சிறு வீதியில் இருந்து, பிரதான வீதிக்கு துவிச்சக்கர வண்டியை செலுத்திய வேளை பிரதான வீதியில் வந்த மோட்டார் சைக்கிளைக் கண்ணுற்று, துவிச்சக்கர வண்டியை நிறுத்த முயற்சித்த வேளை வீதியில் விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று(2) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில், தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

