கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரச பேருந்துடன் முருகண்டி பகுதியில் இருந்து மணல் ஏற்றி யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
டிப்பர் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரியவருகிறது.
அரச பேருந்தின் சாரதி மற்றும் டிப்பர் சாரதி உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

