15 விவசாயிகளுக்கு 45000 ரூபா பெறுமதியான காசோலை வழங்கும் நிகழ்வு

தேசிய அறுவடைக்குப் பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் ஏற்பாட்டில் விவசாயிகளின் தானியக்களஞ்சியங்களை மேம்படுத்தல் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 15 விவசாயிகளுக்கு 45000 ரூபா பெறுமதியான காசோலை வழங்கும் நிகழ்வு கனகாம்பிகைக்குளம் நெல் களஞ்சியசாலை அலுவலகத்தில் நடைபெற்றது.

தேசிய அறுவடைக்குப் பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் மாவட்ட உத்தியோகத்தர் சோமகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய அறுவடைக்குப் பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ரோகித பிரசாந்த் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலையை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன், தேசிய அறுவடைக்குப் பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *