வவுனியாவில் புயலால் பாதிக்கப்பட்ட 66 தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி உதவி

சிறு புயலால் பாதிக்கப்பட்ட சுய தொழில்களை மீண்டும் தொடங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் நிதி உதவி நேற்று(28)  மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் வழங்கப்பட்டது.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் தலைமையில், 66 தொழில் முயற்சியாளர்களுக்கு தலா ரூ. 200,000 வழங்கப்பட்டது. விநியோகிக்கப்பட்ட தொகை ரூ. 1.2 மில்லியன்.
வவுனியா, வவுனியா தெற்கு, செட்டிகுளம் மற்றும் நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த இந்தத் தொழில் முயற்சியாளர்கள் சமீபத்திய சிறு புயலால் பாதிக்கப்பட்டனர்.
வவுனியா மாவட்ட செயலாளர் சரத்சந்திரவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *