கடமை முடித்து வீடு சென்ற கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
கடந்த 28ஆம் திகதி அன்று அலுவலகத்தில் கடமை முடித்து தனது வீடான பருத்தித்துறைக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது எழுதுமட்டுவாளுக்கு அண்மித்த பகுதியில் இனம்தெரியாத நபர்கள் குறித்த உத்தியோகத்தரை பேருந்தில் போத்தல் கொண்டு தாக்கியிருந்தனர்.
தாக்கப்பட்ட உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

