ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் சந்தனச் சிறுத்தைக் குட்டி ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(09) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியோரத்தில் சிறுத்தைக் குட்டி ஒன்றின் உடல் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள், அது குறித்து உடனடியாக பொகவந்தலாவை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லன்னி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

