கொட்டகலை மற்றும் வட்டகொடை நூலகங்களுக்கு புத்தகங்கள், வாசிப்பு மேசைகள் வழங்கல்

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த்தின் வேண்டுகோளுக்கிணங்க கண்டி உதவி உயர் ஸ்தானிகராலயத்தினால் கொட்டகலை பிரதேச சபைக்கு உரித்தான கொட்டகலை மற்றும் வட்டகொடை பொது நூலகங்களுக்கான புத்தகங்கள் மற்றும் வாசிப்பு மேசைகள் என்பன வழங்கி வைக்கப்படும் நிகழ்வு கொட்டகலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கைக்கான இந்திய உதவி ஆணையாளர் சரண்யா, கொட்டகலை பிரதேச சபையின்  தலைவர் இராஜமணி பிரசாந்த், உப தலைவர் ஜேசுதாசன் யாகுலமாரி, உறுப்பினர் சுப்பையா மகேந்திரன், உறுப்பினர் பொன்னையா இரவிச்சந்திரன், உறுப்பினர் நந்தகோபால் பாஸ்கரன், உறுப்பினர் சிவசாமி பத்மநாதன், உறுப்பினர் சுந்தர்ராஜ் சுரேஷ், உறுப்பினர் கணபதி கண்ணதாசன், உறுப்பினர் விஜயசீலன் சுதர்ஷன, உறுப்பினர் கணேசன் ராஜேந்திரன், உறுப்பினர் மொஹமட் யூசுப் கான், கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் உட்பட உத்தியோகத்தர்கள் மற்றும் வாசிகசாலையின் மாணவ வாசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *