இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணி சாதனையைப் பதிவு செய்துள்ளது.
2வது சிலம்பம் உலகக் கோப்பை மற்றும் பாரம்பரிய கலை விழா 2026 என்ற சர்வதேச மட்டப் போட்டி, உலக சிலம்பம் கூட்டமைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் ஓசூர் நகரில் கடந்த 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
மொத்தம் ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், இலங்கை சிலம்பம் கூட்டமைப்பு சார்பில் கலந்து கொண்ட இலங்கை அணி 29 தங்கப் பதக்கங்கள், 16 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 24 வெண்கலப் பதக்கங்கள் வென்று மொத்தப் பதக்க எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியை ஆசான் ரா. திவாகரன் தலைமையேற்று வழிநடத்தினார். வீரர்களின் ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் கடின உழைப்பின் பலனாக இந்த சிறப்பான வெற்றி இலங்கைக்கு கிடைத்துள்ளது.

