பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் நேற்று(20) மதியம் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

