நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து மத்திய மலைநாட்டில் மரக்கறிகளின் விலையில் ஏற்றத்தாழ்வுகள் பதிவாகின.
இதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் கோவா 140 ரூபாய்க்கும், கரட் ஒரு கிலோகிராம் 250 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது.
லீக்ஸ் ஒரு கிலோகிராம் 190 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோகிராம் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அத்துடன், ஒரு கிலோகிராம் பீட்ரூட் 110 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோகிராம் 2,000 ரூபாய்க்கும் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

