அவிசாவளை ரயில் கடவைக்கு தற்காலிகமாகப் பூட்டு

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் (ஹைலெவல் வீதி), புவக்பிட்டிய மற்றும் அவிசாவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில் கடவை, எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

களனிவெளி ரயில் பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2026 மார்ச் 05 மற்றும் மார்ச் 06 காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை போக்குவரத்து பகுதியளவில் தடைப்படும்.

2026 மார்ச் 07 மற்றும் மார்ச் 08 காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும்.

எனினும், இவ்விரு தினங்களிலும் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையான 4.5 மணித்தியாலங்கள் போக்குவரத்துக்காக ரயில் கடவை முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்ப்பதற்காக, வாகனச் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை புகையிரத பொது மேலாளர் அலுவலகத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *