இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம்; பாகிஸ்தானுக்கான விமான சேவை இடைநிறுத்தம்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும் விமானங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என மேலும் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஒபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையாக வான்வழி தாக்குதலை இந்திய மத்திய அரசு நடத்தியது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே இன்று(08) காலை குண்டு வெடித்தது. விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அடுத்தடுத்து பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.
மேலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறினர். மேலும் லாகூர் விமான நிலையத்திலும் அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.
லாகூரில் குண்டு வெடிப்பு நடந்ததை பொலிஸார் உறுதி செய்தனர். விமானநிலையத்திற்கு அருகிலுள்ள வால்டன் வீதியில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு நடந்தது என்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் கராச்சியிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை லாகூரில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்த நிலையில் தற்போது கராச்சியிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துள்ளது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால் கராச்சியில் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *