பசறை தமிழ் தேசிய பாடசாலை மாணவர்கள் நன்றியுடன் விடைபெற்றனர்

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை எழுதிய பசறை தமிழ் தேசிய பாடசாலை மாணவர்கள், தங்களை கல்வி வழியில் வழிநடத்திய பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி நன்றியுணர்வுடன் பாடசாலையிலிருந்து விடைபெற்றனர்.
இதன்போது, தாம் இத்தனை காலம் கல்வி கற்ற பாடசாலையின் கல்வித் துணையாக விளங்கும் சரஸ்வதி அன்னைக்கு வணக்கம் செலுத்தி, கல்விப் பயணத்தில் வழங்கிய அருளுக்கும் ஆதரவிற்கும் நன்றியையும் தெரிவித்தனர்.
மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றத்திற்காக அதிபரும் ஆசிரியர்களும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இந்நிகழ்வு உணர்ச்சிப்பூர்வமான சூழலில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *