ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் குறைந்தது 133 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 200க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் உயிரிழந்தவர்களில் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் அவரது குடும்பத்தினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சில கணிப்புகளின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 700க்கும் மேற்பட்டதாகவும் உள்ளதாக கருதப்படுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் நேற்று(28) ஈரான் மீது நடத்திய பாரிய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதோடு, ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் வீட்டை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.
தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டது.

