பிரஜாசக்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக் கட்ட அடிக்கல் நடும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகப்பிரிவில் நேற்று(12) நடைபெற்றது.
காரைதீவு பிரதேச செயலகப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 15 வீடுகளில் முதல் 04 வீடுகளுக்கு முதற்கட்ட அடிக்கல் நடும் நிகழ்வு அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழில்நுட்ப அலுவலர், பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், பிரஜாசக்தி தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

