பிரார்த்தனைகளால் ஒன்றிணைவோம்..
சுமார் ஒரு மாத காலம் நோன்பிருந்து பிறரின் பசி அறிந்து இறைவன் விதித்த நாட்டப்படி நோன்பிருந்து இன்றைய தினம் புனித பெருநாளை கொண்டாடுகிறோம்.
நமது மார்க்கமும் பாரம்பரியமும் உலகம் தோன்றிய நாளிலிருந்து ஆரம்பமாகியது. முஸ்லிம்களாகிய நமது முதலாவது திருநாளாகிய இத்தினத்தில் நாம் ஓரளவு நிம்மதியாக இருக்கின்ற சந்தர்பத்தில் நமது முஸ்லிம் உம்மத்துக்கள் காசாவிலும் ஈரானிலும் சியோனிச சக்திகளால் பெரிதும் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்றனர்.
நமது பிரார்த்தனைகள் எப்பொழுதும் அவர்களை இணைத்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஓரிறைக் கொள்கையிலும் சகோதரத்துவ வாஞ்சையோடும் வாழ வேண்டும் என்ற நமது இஸ்லாம் மார்க்கத்தின் போதனை உண்மையாகும்.
ரமழான் மாதத்தில் உள்ள புனிதம் என்பது மனங்களிலும் வாழ்வினிலும் ஒளி ஊட்டுவது போல எல்லாம் வல்ல இறைவன் நமது எல்லா செயல்களிலும் நல்லருளை நமக்கெல்லாம் வழங்குவதோடு நமது பலஸ்தீன் மற்றும் ஈரானிய சொந்தங்களுக்காகவும் பிராத்தித்தவனாக இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரியா மசூர்
பிரதேச சபை உறுப்பினர்,
உச்சபீட உறுப்பினர்,
அட்டாளச்சேனை பிரதேச அமைப்பாளர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

