தனியார் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன

பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் வரை பஸ் சேவைகளை நிறுத்தி வைப்பதாகப் பல தனியார் பஸ் சங்கங்கள் எடுத்த முடிவைத் தொடர்ந்து, இன்று காலை(23) முக்கிய பஸ் நிறுத்தங்களில் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.

 

இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதும் காணப்பட்டது.

 

நேற்று இரவு (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளைத் திருத்தி அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது; அதன்படி, டீசலின் விலை உயர்வு காரணமாக பஸ் கட்டணங்களைத் திருத்தி அமைப்பது அவசியம் என பஸ் சங்கங்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தெரிவித்திருந்தன.

 

அதன்படி, பேருந்து சங்கங்கள் நேற்று (22) பஸ் கட்டணங்களைத் திருத்தியமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அது செயற்படுத்தப்படாததால் இன்று பஸ் சேவைகளிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

 

அதன்படி, பேருந்து சங்கங்கள் நேற்று (22) பஸ் கட்டணங்களைத் திருத்தியமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அது செயற்படுத்தப்படாததால் இன்று பஸ் சேவைகளிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

 

இந்நிலையில், பஸ் கட்டணங்களைத் திருத்தி அமைப்பதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும், அதன்படி இன்று அமைச்சரவைக் குறிப்பாணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் தேசியப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, பேருந்துக் கட்டணத் திருத்தத்துக்கான அமைச்சரவை ஒப்புதல் இன்று பெறப்பட உள்ளதாகவும், புதிய பஸ் கட்டணங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இருப்பினும், புதிய பஸ் கட்டணங்கள் அறிவிக்கப்படும் வரை சேவைகளிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாகப் பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *