ஹட்டனில் தனியார் பேரூந்து நடத்துனர் சடலமாக மீட்பு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், செம்புவத்தை தோட்டத்திற்கு அருகாமையில் இன்று (31) காலை 40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

உயிரிழந்தவர் கண்டி – கொழும்பு தடத்தில் பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராகப் பணியாற்றுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

இவர் ஹட்டன், வெளிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை எனத் தெரியவருகிறது.

 

இவர் கடந்த 29-ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பாக அவரது குடும்பத்தினரால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

 

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *