தர்மபுரத்தில் தங்க நகை பணம் பேருந்தில் தவறவிடப்பட்டுள்ளது

தர்மபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவர், கிளிநொச்சி அரச வங்கியில் அடகு வைத்திருந்த தங்க நகையை மீட்பதற்காக இன்று (16) பணத்துடன் சென்று நகையை மீட்டுள்ளார்.

 

பின்னர் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, புளியம்பக்கலை மற்றும் விசுவமடு பகுதிகளுக்கு இடையில் அவரது பணப்பை தவறவிடப்பட்டுள்ளது.

 

அந்த பணப்பையில் 85 ஆயிரம் ரூபாய் பணம், வங்கியில் மீட்ட தங்க நகை, மூன்று வங்கிப் புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த பொருட்களை கண்டுபிடித்தவர்கள் அல்லது எடுத்தவர்கள் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு உதவுமாறும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *