முள்ளிவாய்க்காலின் நினைவுகள் சுமந்த ஊர்தி கிளிநொச்சி பகுதி ஊடாக புதுக்குடியிருப்பு பகுதியை நோக்கி மக்களின் அஞ்சலிக்காக சென்று நாளை(18) முல்லைத்தீவு முள்ளியவளை ஊடாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி வருகை தரும் பொழுது வீதியோரங்களில் மக்கள் திரண்டு தமது அஞ்சலியை செலுத்தினர்.

