திருகோணமலை காளி கோயிலில் இன்று (18) காலை முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வை, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் திருகோணமலை மாநகர சபை முதல்வர் கந்தசாமி செல்வராஜா (சுப்ரா) ஆகியோர் ஈகைச்சுடரேற்றி ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது, முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்த எமது உறவுகளுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவேந்தலின் அடையாளமாக ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பரிமாறப்பட்டது.
இந்நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலிகளைச் செலுத்தினர்.

