முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (18) உரும்பிராயில் அமைந்துள்ள முதல் விடுதலைப் போராளி பொன்.சிவகுமாரின் சிலை அருகில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பொன்.சிவகுமாரின் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டதுடன், 100 பேருக்கு அரிசிப்பொதிகளும் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

