இலங்கை மகளிர் கிரிக்கெட் ஏ அணியில் இடம்பிடித்த சஜிந்தினிக்கு மன்னாரில் வரவேற்பு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம்பிடித்த மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த வீராங்கனை சதீஸ்குமார் சஜிந்தினிக்கு இன்று(28) காலை மன்னார் அரச பேருந்து நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய பாடசாலை நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து குறித்த வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வீராங்கனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள சஜிந்தினியின் சாதனைக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *