கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு தயாரிப்பான ஷொட்கன் ரக துப்பாக்கி ஒன்றுடன் பங்குடாவெளியைச் சேர்ந்த விவசாயி ஒருவரை நேற்று(31) மாலையில் கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பத்தும் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் வேப்பவெட்டுவான் வயல் பகுதியில் நிலக்கடலை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் பகுதியில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை மீட்டதுடன் பங்குடாவெளி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய விவசாயி ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

