மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றம் பதிவாகியுள்ளது.

 

சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, அமெரிக்காவின் தரக்குறியீடாகக் கருதப்படும் டபள்யூரிஐ ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 95.13 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியைக் காட்டியுள்ளது.

 

அதேநேரம், உலகளவில் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 96.74 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

 

இந்நிலையில், இயற்கை எரிவாயு சந்தையில் விலை உயர்வு பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *