டிப்பர் வாகன இலக்கத் தகடு மோசடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது

முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 2024 டிப்பர் வாகனம் ஒன்றின் நீதிமன்றில் முற்படுத்த வேண்டிய டிப்பரின் இலக்கத்திற்க்கு பதிலாக வேறு டிப்பர் ஒன்றின் இலக்கத்தினை பயன்படுத்தி நீதிமன்றில் முற்படுத்திய குற்றச்சாட்டில் விசாரானைகள் நடைபெற்றுவந்தது.

 

இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று(23) சந்தேகத்தின் பேரில் முள்ளியவளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபொழுது எதிர்வரும் 02.07 2026 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *