வன்னேரிக்குளத்தில் இலவச மருத்துவ முகாம்

யாழ்ப்பாணம் மருத்துவச் சங்கமும், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இலவச மருத்துவ முகாம், வன்னேரிக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

 

இந்த மருத்துவ முகாமில் பொது வைத்திய நிபுணர், குழந்தை வைத்திய நிபுணர், சத்திரசிகிச்சை நிபுணர், தோல் மற்றும் சரும நோய் நிபுணர், பெண்நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர், பல் மருத்துவ மற்றும் வாய்வழி அறுவைச் சிகிச்சை நிபுணர், கண் மருத்துவ நிபுணர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கினர்.

 

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், தேவையான மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், நோயறிதலுக்குத் தேவையான குருதிப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *