இடைநிறுத்தப்பட்ட டித்வா வீட்டுத்திட்ட பணத்தை வழங்க வலியுறுத்தி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரந்தன் கிராம மக்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
டித்வா வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெற்ற நிலையில் ஆரம்பதொகை வழங்கி வீட்டுத்திட்டத்தை தாம் ஆரம்பித்த நிலையில் பணம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் கடன்சுமையை எதிர்கொண்டுள்ள நிலையில் தமது மீதி பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்திருந்தனர்.

