போசாக்கு மாதத்தை முன்னிட்டு, “நஞ்சற்ற போசாக்கான உணவை உட்கொள்வோம்” என்ற தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
தர்மபுரம் மத்திய கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, தர்மபுரம் இலக்கம் 01 அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை வரை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தர்மபுரம் பொலிஸார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நஞ்சுள்ள மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் தொற்றுநோய்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், நஞ்சற்ற உணவுப் பழக்கத்தை ஊக்குவித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நஞ்சற்ற உணவுகள் தொடர்பான போசாக்குக் கண்காட்சியும் தர்மபுரம் இலக்கம் 01 அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

