வெள்ள அபாயம் நீக்கம் – ஆறுகளின் நீர்மட்டம் வழமைக்கு

பல முக்கிய ஆற்றுப் படுகைகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள எச்சரிக்கைகளைத் திரும்பப் பெற்றுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு,

குறித்த நதிப் படுகைகளில் நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மகாவலி ஆறு, களு கங்கையின் துணைப் படுகையான குடா கங்கை, நீல்வலா கங்கை மற்றும் கின் கங்கை ஆகியவற்றிற்கான வெள்ள எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் நிலவும் மழைவீழ்ச்சி மற்றும் ஆறுகளின் நீர்மட்டங்களில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டால் முற்கூட்டியே எச்சரிக்கை விடுக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *