பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 4 பகுதியில் 54 வயதுடைய 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வேலுப்பிள்ளை பிரவாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இச் சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். நசீலின் உத்தரவின் பேரில், திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

மரண விசாரணைகளின் பின்னர், உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *