தெதுரு ஓயா பெருக்கெடுப்பு – வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிப்பு!

தெதுரு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.

குருநாகல் மற்றும் மஹவ இடையிலான ரயில் மார்க்கம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அம்மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பில் இருந்து பயணிக்கும் ரயில்கள் குருநாகல் வரையிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் ரயில்கள் மஹவ வரையிலும் மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நேற்று (02) பெய்த மழையுடன், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *