8 மாதங்களில் வரியல்லாத வருமானம் உயர்வு!

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் வரியல்லாத வருமானம் முந்தைய ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியடைந்துள்ளது.

வரவு -செலவுத் திட்டம், பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை தொடர்பான 2027 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் பதிவான 226.2 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் அதே காலப்பகுதியில் 314.8 பில்லியன் ரூபாவாக 39.1 வீதத்தினால் மிதமான வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்தின் மொத்த வருமானத்திற்கு வரியல்லாத வருமானம் 7.9 வீத பங்களிப்பை வழங்கியுள்ளது.

மத்திய வங்கியின் 42.1 பில்லியன் ரூபா இலாபப் பரிமாற்றங்கள் உட்பட இலாபங்கள் மற்றும் ஈவுத்தொகைகள், வாடகைகள், அபராதங்கள், கட்டணங்கள் மற்றும் அறவீடுகள், வட்டி வருமானம் மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு மூலம் கிடைத்த வருமானம் அதிகரித்தமை வரியல்லாத வருமானம் வளர்ச்சியடைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

அதற்கமைய, வட்டி வருமானமானது 2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் பதிவான 43.4 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 51.7 பில்லியன் ரூபாவாக 19.1 வீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபராதங்கள், கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் ஊடாகக் கிடைத்த வருமானமும் முந்தைய ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் அதிகரித்துள்ளதுடன், அதற்கமைய முந்தைய ஆண்டின் 112.6 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 18.7 வீதத்தினால் வளர்ச்சியடைந்து, நடப்பாண்டில் 133.6 பில்லியன் ரூபா பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட கட்டணங்கள் மற்றும் அறவீடுகளின் வருமானமும் அதிகரித்துள்ளது.

அத்துடன், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரித்தமை மற்றும் பங்களிப்பு வீதம் உயர்த்தப்பட்டமை காரணமாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பிலிருந்தும் அரசாங்கத்திற்கு கிடைத்த வருமானம் முந்தைய ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதுடன், அதற்கமைய முந்தைய ஆண்டின் 36.6 பில்லியன் ரூபாவைத் தாண்டி நடப்பாண்டின் அதே காலப்பகுதியில் 45.3 பில்லியன் ரூபா பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வாடகை வருமானமும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் பதிவான 3.9 பில்லியன் ரூபாவிலிருந்து நடப்பாண்டின் அதே காலப்பகுதியில் 5.1 பில்லியன் ரூபாவாக 31.8 வீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளது.

இதற்கிடையில், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட இலாபம் மற்றும் ஈவுத்தொகை வருமானமும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதுடன், அதற்கமைய 2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் பதிவான 14.6 பில்லியன் ரூபாவைத் தாண்டி நடப்பாண்டின் அதே காலப்பகுதியில் 19.9 பில்லியன் ரூபாவாக 36 வீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளது.

அதற்கமைய, 2026 ஆம் ஆண்டிற்காக மதிப்பிடப்பட்ட 360 பில்லியன் ரூபா வரியல்லாத வருமான இலக்கில் 87.4 சதவீதத்தை முதல் எட்டு மாதங்களுக்குள் திரட்டிக்கொள்ளவும் முடிந்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *