ஹோர்முஸில் கண்ணிவெடிகளில் சிக்கிய இரு எண்ணெய்க் கப்பல்கள்!

ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் சிக்கியதாக IRGC தெரிவித்துள்ளது.

அமெரிக்க விமானங்களின் பாதுகாப்பில் ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பாதையைப் பயன்படுத்திக் கொண்டிருந்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கியதைத் தொடர்ந்து, அவற்றில் வெடிப்புகள் ஏற்பட்டதாக IRGC தெரிவித்துள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை மற்றும் அந்த மூலோபாய நீர்வழியில் விதிக்கப்பட்ட ஈரானிய விதிகளை மீறுவதற்கு பதிலடியாகவே தங்களின் “கடுமையான நடவடிக்கைகள்” எடுக்கப்பட்டுள்ளதாக IRGC கடற்படை ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், தங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத கப்பல்கள் “கண்டிப்பாகக் கையாளப்படும்” என்றும் அந்த அரசு ஆதரவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *