அமெரிக்கா, ரஷ்யா, சீனா இணைந்து கூட்டு சமாதானப் பிரகடனம் வெளியீடு!

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோர் இணைந்து கூட்டு சமாதானப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஆசிய -பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் தென்கிழக்கு நகரமான ஷென்சென்னில் (Shenzhen) இம்மூன்று தலைவர்களும் 90 நிமிடங்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

இத்தலைவர்கள் இதற்கு முன்னர் இருதரப்புச் சந்திப்புகளை நடத்தியுள்ள போதிலும், இவர்களுக்கிடையேயான முதலாவது முத்தரப்புப் பேச்சுவார்த்தை இதுவாகும்.

அணு ஆயுதப் போரில் எவரும் வெல்ல முடியாது, அது ஒருபோதும் நடத்தப்படவும் கூடாது என்றும், பெற்றோலிய உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்கத் தங்கள் நாடுகள் திட்டமிட்டுள்ளதாகவும் அப்பிரகடனத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உலகளாவிய சவால்களுக்கு மிகவும் திறம்படப் பதிலளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையைச் மறுசீரமைப்பதற்கு தாங்கள் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பு (immunity) குறித்த விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ள குறித்த அறிக்கை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்கள் தமது அதிகார வரம்பை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் அவர்கள் உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

‘ஏர் ஃபோர்ஸ் வன்’ (Air Force One) விமானத்தில் வொஷிங்டன் திரும்பிக்கொண்டிருந்த போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், இந்த முத்தரப்புச் சந்திப்பை ஒரு சிறந்த மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயணம் என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

அதே பதிவில், இப்பயணம் குறித்துப் பேசுவதற்காக வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் தங்கியிருந்த போது, முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ட்ரம்ப் புடினைச் சந்தித்தார்.

2025 ஒகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் இவ்விருவரும் சந்தித்துக்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *