கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் அளவுகோல் அடிப்படையிலான மானிய உதவித் திட்டத்தின் (Criteria Based Grant – CBG 2026) கீழ், சமூக அமைப்புகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (23) திங்கட்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு – திருக்கோவில் பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர். ரதீசன், பிரதேச சபை உறுப்பினர் கே.ரஞ்சி, பிரஜா சக்தி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
சமூக அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் சமூகநல அமைப்புகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, அக்கரைப்பற்று மருது விளையாட்டுக் கழகம் மற்றும் கோளாவில் ஒளியின் எழுச்சி அமைப்பு ஆகிய இரு அமைப்புகளுக்கும் தலா 75,000 ரூபா பெறுமதியான 35 பிளாஸ்டிக் கதிரைகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டன.

