டெஸ்ட் தரவரிசையில் ஜெய்ஸ்வால்!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் ஹென்ரி நிகோல்சின் சதத்தால் 368 ஓட்டங்கள் எடுத்தது.

எதிர்த்தாடிய இந்தியா முதல் இன்னிங்சில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் சதத்தாலும், சுப்மன் கில் ஜெய்ஸ்வால், படிக்கல், துருவ் ஜுரல் ஆகியோரின் அரை சதத்தாலும் 720 ஓட்டங்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 239 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் இந்தப் போட்டி சமநிலையில் முடிந்தது.

இந்நிலையில் டெஸ்ட் துடுப்பாட்ட வீர்ர்களின் தரவரிசையை ஐசிசி இன்று (25.11.2026) வெளியிட்டது. இதில் இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட், சுப்மன் கில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடம் பிடித்துள்ளார். ரிஷப் பண்ட் ஒரு இடம் முன்னேறி 6வது இடமும், சுப்மன் கில் 3 இடம் முன்னேறி 7வது இடமும் பிடித்துள்ளனர்.

இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடத்திலும், ஜோ ரூட் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா 3வது இடத்திலும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *