பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் நகரில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (27.11.2026) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் கலந்துகொண்டு, ஈழ மண்ணில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் நினைவுகளும் அவர்களது தியாகங்களும் நினைவுகூரப்பட்டன
புலம்பெயர் தமிழ் மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, அடுத்த தலைமுறையினருக்கும் மாவீரர்களின் நினைவுகளை எடுத்துச் செல்லும் வகையில் அமைந்திருந்தது.

