சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவனி!

நாட்டின் 22 மில்லியன் மக்களிடமும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை மருத்துவ சங்கம் மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்த SLMA Health and Wellness Walk 2026 சுகாதார நடைபவனி, இன்று (28.11.2026) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ஆரம்பமானது.

‘உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளித்துவத்தின் ஊடாக நாட்டின் நல்வாழ்வு’ என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நோய்கள் ஏற்பட்ட பின்னர் சிகிச்சை பெறுவதை விட, நோய்கள் ஏற்படுவதற்கு முன்னரே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதே இதன் நோக்கமாகும்.

அனைத்து வயதினரும் பங்கேற்ற இந்த நடைபவனி, சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பித்து, மைட்லண்ட் பிளேஸ் வழியாகச் சென்று தாமரைத் தடாக அரங்கிற்கு அருகில் நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *