சிறுத்தையின் பற்களை விற்பனை செய்ய முயன்றவர் கைது!

சிறுத்தையின் இரண்டு பற்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப்படை புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, ரிதிகல மற்றும் அநுராதபுர வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது, குடாபலாடிகுளம் சந்திப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சிறுத்தையின் இரண்டு பற்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (28) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *