சித்தாண்டி சமூகத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

சித்தாண்டி சமூகத்தின் ஏற்பாட்டில் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று(18) சித்தாண்டி முற்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

 

இதன்போது நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை மாவீரர் ஒருவரின் தாயார் ஏற்றி வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

 

இன, மத பேதமின்றி வீதியால் சென்ற பொதுமக்கள் அதனை அருந்தினார்கள்.

 

இந் நிகழ்வில் தழிழரசு கட்சி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரசியல் பிரதிநிதிகளால் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *