அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் மாவட்ட செயலக முன்றலில்  இன்று (24) நடைபெற்றது.

சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மௌலவி சஹ்றான் ஹஸன்(அன்வாரி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் திகவாபி விகாராதிபதி பேதி வேல சந்தானந்த நாயக்க,கல்முனை சிவஸ்ரீ க.வி பிரமின் குருக்கள்,அம்பாறை மேதடிஸ் ஆலய அருட் தந்தை ரோகான் அப்பு காமி உட்பட மத போதகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு மாவட்ட செயலக முஸ்லிம் மஜ்லிஸின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *