மது போதையில் ‘சிசுசெரிய’ பேருந்தை செலுத்திய பேருந்து சாரதி கைது

மது போதையில் ‘சிசுசெரிய’ பேருந்து ஒன்றை செலுத்திய பேருந்து சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(19) மதிய வேளையில், கட்டுபோத்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளால், கட்டுபோத்த நகரில் ‘சிசு செரிய’ பேருந்து ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது, அந்த சாரதி மது போதையில் இருப்பது கண்டறியப்பட்டு, பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். 52 வயதுடைய, கட்டுபோத்த, ரதலியகொட பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சமயத்தில், பேருந்தில் 16 பாடசாலை மாணவர்களும், இரண்டு தாய்மார்களும் பயணித்துக் கொண்டிருந்தனர். பேருந்தும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, இலங்கை பொலிஸார் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கும், போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *