பேருந்து தரிப்பிடப் பகுதியை சீரமைக்குமாறு மக்கள் வேண்டுகோள்

கண்டி நகரில் அமைந்துள்ள மணிக்கூண்டுக் கோபுர பேருந்து தரிப்பிடம் குண்டும் குழியுமாகக் காணப்படுவதனால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

 

நீண்டகாலமாக இந்த பேருந்து தரிப்பிடத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை நிவர்த்திக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

இந்த பேருந்து தரிப்பிடத்தில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் பயணிகள் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

 

ஆகவே, பேருந்து தரிப்பிடப் பகுதியை உடனடியாக சீரமைக்குமாறு மக்கள் உரிய தரப்பினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

இந்த பேருந்து தரிப்பிடத்தில் இருந்து மாத்தளை, அக்குறணை, வத்தேகம, மடவல, கட்டுகஸ்தோட்டை வீதியில் செல்லும் பேருந்துகள் மற்றும் பிலிமத்தலாவை, கடுகண்ணாவை, மெனிக்கின்ன, கரலியத்த, கலஹா, ஹந்தானை உட்பட இன்னும் பல இடங்களுக்கு பயணிக்கும் தனியார், அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *