அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் கடலில் கொள்ளையிடப்படுவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை திகமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் மற்றும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான ஏ. ஆதம்பாவா (பா.உ), மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான கந்தசாமி பிரபு, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் (பா.உ) அது போன்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் ஓய்வு பெற்ற அருண ஜயசேகரவையும் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினர்.
அத்துடன் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் என்றும் அவர்களால் உறுதியளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.