நேற்று(22) கதிர்காமம் பெரிய ஆலயத்தில் இடம்பெற்ற பாதயாத்திரைக்கான பாதை திறத்தல் மூடுதல் சம்பந்தமான கூட்டத்தொடரானது மொனராகலை அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் எதிர்வருகின்ற 06ம் மாதம் 20 ஆம் திகதி பாதை திறக்கப்படும் என்றும் 07ம் மாதம் 04 பாதை அடைக்கப்படும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றது.
பாதை திறத்தல் மூடுதல் சம்பந்தமான திகதிகளை மாற்றி அமைப்பதற்கு நேற்றைய கூட்டத்தொடரில் பாதயாத்திரிகர் சங்கங்கள், பொது அமைப்புகள் கலந்து கொள்ளவில்லை.
எமது அமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய 22 ஆம் திகதி துறக்க இருந்த பாதை 20 ஆம் திகதியாக மாற்றப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் இம்முறை யாத்திரை மேற்கொள்ளுகின்ற அடியவர்கள் யாத்திரையின் போது உக்காத பொருட்களான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் போன்றவற்றை கொண்டு செல்வதை முற்றாக தடுக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது.
ஆகவே யாத்திரை மேற்கொள்ள இருக்கின்ற எமது அன்பு அடியவர்கள் இந்த பாதையின் உடைய புனிதத்தை பாதுகாக்க நாங்களும் இந்த பாதையிலே நல்ல விடயங்களை நல்ல செயற்பாடுகளை செய்வதுதான் பாதையினுடைய புனிதத்தை பாதுகாப்பதற்கும் எதிர்காலத்தில் பத்தாம் நாள் பதிலே கால் வைக்க வேண்டும் என்பதை மீட்டெடுப்பதற்கும் வழிவகுக்கும் ஆகவே அனைவரும் ஒன்றுபட வேண்டும்.