புத்தளம் – வென்னப்புவ பகுதியில் பெருந்தொகை பீடி இலைகளுடன் 7 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 1100 கிலோ நிறையுடைய பீடி இலைகளை பறிமுதல் செய்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரை கைது செய்துள்ளனர்.
லொறி, வேன் மற்றும் பீடி இலைகளுடன் கைது செய்யப்பட்ட 7 பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.