இந்திய கிரிக்கெட் அணியின் சூழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பியூஷ் சாவ்லா 3 டெஸ்ட் போட்டிகள், 7 டி20 போட்டிகள் மற்றும் 25 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
அதன்படி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும், 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்தியப் ப்ரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 192 போட்டிகளில் விளையாடி 191 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

