இலங்கை – சிம்பாப்வே தொடர்; போட்டி அட்டவணை வெளியீடு

இலங்கை கிரிக்கெட் அணி ஓகஸ்ட் மாதம் இறுதியில் சிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரிலும் விளையாட உள்ளது.

இப் போட்டிகளுக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய ஓகஸ்ட் 29 மற்றும் 31ம் திகதிகளில் ஒருநாள் போட்டிகளும், செப்டம்பர் 3, 6 மற்றும் 7-ம் திகதிகளில் டி20 சர்வதேச போட்டிகளும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *